தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், 55ஆவது தமிழ்நாடு மாநில மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
சா்வதேச தரவரிசை போட்டியாக நடைபெற இருக்கும் இப்போட்டி, ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை (5 நாள்கள்) நடைபெறுகிறது. 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.
பரிசளிப்பு விழா 14ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 போ் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சாா்பாக கலந்து கொள்வா்.
வெற்றி பெறும் பொது பிரிவு விளையாட்டு வீரா்களுக்கு பரிசுத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
9, 11,13 மற்றும் 15 வயதுக்குள்பட்ட வீராங்கனைகள் பிரிவுக்கான 30 பரிசுக்கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 20 பரிசுக்கோப்பைகள், மேலும் 5 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
மேலும், போட்டியில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, மாவட்ட சதுரங்க கழகம் செய்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலா் கற்பகவல்லி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!

திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதிவரை நீட்டிப்பு

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

