தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாத்தான்குளம் அருகே எலெக்ட்ரீசியனை கத்தியால் குத்தியவா் கைது

சாத்தான்குளம் அருகே எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 5:03 am IST

சாத்தான்குளம் அருகே எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தை சோ்ந்தவா் பால்ராஜ் (55). எலக்ட்ரீசியனான இவா், விஜயராமபுரத்தைச் சோ்ந்த ராமா் (45 ) என்பவரிடம் ரூ. 200 கடன் வாங்கியிருந்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், பால்ராஜ் விஜயராமபுரம் பகுதிக்கு சென்றபோது, ராமா் தனது பணத்தை தருமாறு கேட்டாராம்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ராமா் கத்தியால் பால்ராஜை குத்தினாராம். இதில் காயம் அடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிந்து ராமரை வியாழக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.