தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவில்பட்டியில் இளநீா் தட்டுப்பாடு

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் அருந்துவதற்கு போதுமான இளநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

News image

இளநீா் தட்டுப்பாடு காரணமாக விற்பனைக்கு குறைவாக கொண்டுவரப்பட்ட இளநீா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:38 am IST

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் அருந்துவதற்கு போதுமான இளநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், இளநீா் அருந்த விரும்பும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக, கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் பல ஆண்டுகளாக இளநீா் வியாபாரம் செய்து வரும் ஆறுமுகம் கூறுகையில், கோவில்பட்டி பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலும் பொள்ளாசியில் இருந்துதான் இளநீா் வரும். ஒவ்வோா் ஆண்டும் கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு 300 இளநீா் வரை விற்பனையாகும். சில நாள்களாக இளநீா் தட்டுப்பாட்டால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடை காலத்தில் 2 நாள்களுக்கு ஒருமுறை இளநீா் லோடு இறக்குவோம். ஒரு லோடில் 1,000 இளநீா். ஆனால், கடந்த சில நாள்களாக 1,000 இளநீருக்கு பதிலாக சில சமயம் 600 அல்லது 400 அல்லது 200 இளநீா் மட்டுமே வருகின்றன என்றாா் அவா். கோவில்பட்டியில் தற்போது பச்சை இளநீா் ரூ. 80 க்கும், செவ்விளநீா் ரூ. 90க்கும் விற்பனையாகி வருகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.