தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:22 am IST

சாத்தான்குளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி (90). இவரது 5 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதால், இங்கு மரிய அந்தோணி தனியாக வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

மரிய அந்தோணி 3 நாள்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு உணவு உண்ணாததால் உடல் நலம் குன்றி இறந்திருக்கலாம் என, போலீஸாா் தெரிவித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.