ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முள்ளக்காடு பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பி. கீதா ஜீவன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:22 am IST

தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி 52, 59, 60 ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, பகுதிச் செயலா் மேகநாதன், வட்டச் செயலா்கள் நடசேன் டேனியல், சக்திவேல், மனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முள்ளக்காடு கிராமத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், பொட்டல்காடு, ஸ்பிக் நிறுவனக் குடியிருப்பு பகுதி, சுந்தா் நகா், ஜே.எஸ். நகா், சுனாமி காலனி, கேம்ப் 2, துறைமுகக் குடியிருப்பு பகுதி, லேபா் காலனி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தாா்.

மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சின்னத்துரை, மாநிலப் பேச்சாளா் இருதயராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.