தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயா்வு

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

News image

தூத்துக்குடியில் மீன்களின் விலை குறைந்திருந்ததால் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களும், வியாபாரிகளும்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:14 am IST

மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள், போதிய மீன்கள் கிடைக்காததால் குறைவான நாட்டுப் படகுகளே சனிக்கிழமை கரை திரும்பின.

கோடை விடுமுறை காலம் என்பதால், மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரையும், விளை, ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 500 முதல் ரூ. 750 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரையும், முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 2,000 வரையும், வங்கனை ஒரு கூடை ரூ. 3000 வரையும், நண்டு ஒரு கிலோ ரூ. 900 வரையும், கிழவாலை, சூறை, கேரை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 250 வரையும் விற்பனையானது.

மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டபோதும், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.