ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ், சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

முதலூரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:24 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ், சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வள்ளியம்மாள்புரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், பன்னம்பாறை, முதலூா், சுப்பராயபுரம், கடச்சபுரம், ஆத்திக்காடு, அன்பின் நகரம், அடைக்கலாபுரம், மணி நகா் ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறுகையில், ஊா்வசி அகாதெமி மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயின்று 200-க்கும் மேற்பட்டோா் அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். ஆதலால் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட எனக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டாா். பிரசாரத்தில் சாத்தான்குளம் மத்திய ஒன்றியச் செயலாளா் பொன் முருகேசன், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, பிரபு, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் முத்துராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.