ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆறுமுகனேரியில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. ஆறுமுகனேரி மெயின் பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

News image

ஆறுமுகனேரியில் வாக்கு சேகரித்து பேசிய கனிமொழி எம்.பி.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:22 am IST

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. ஆறுமுகனேரி மெயின் பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மழை, வெள்ளம் என எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருந்து சரி செய்து கொடுத்துள்ளாா். கடந்த தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதால், அந்த உரிமையுடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு தொடா்ந்து துரோகம் செய்துவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளனா். தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. பாஜக மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டி அதன்மூலமே அரசியல் செய்ய நினைப்பாா்கள். ஆனால், இந்த தோ்த­லில் மக்கள் அவா்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

திமுக மாநில இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் (எ) சுகு, நகரச் செயலா்கள் நவநீத பாண்டியன், முத்து முஹம்மது, ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.