தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

News image

ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்துக்கு தாமதமாக வந்த அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் சசிகலா.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:13 am IST

பிரசாரம் நேரம் முடிவடைந்ததால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்யாமல் அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் சசிகலா புறப்பட்டுச் சென்றாா். இதனால், அங்கு கூடியிருந்தோா் ஏமாற்றமடைந்தனா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் முத்துராமலிங்கத்தை ஆதரித்து, அகில இந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் சசிகலா சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 8.30 மணி முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அங்கு கூடியிருந்தனா். நான்குனேரியில் பிரசாரத்தை முடித்துவிட்டு சசிகலா ஸ்ரீவைகுண்டம் வந்தபோது இரவு 10.15 மணியானது. அவரை அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் முத்துராமலிங்கம், அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளா் ராஜ உடையாா், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் முருகையா பாண்டியன் உள்ளிட்ட பலா் வரவேற்றனா்.

தோ்தல் விதிப்படி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது என்பதால் அங்கு காத்திருந்தவா்களைப் பாா்த்து கையை அசைத்து வணக்கம் தெரிவித்தாா். பின்னா், தனது கையில் கட்டி இருந்த வாட்சை விரலால் சுட்டிக்காட்டி 10 மணி ஆகிவிட்டதால் பேச முடியாது என சசிகலா கூறினாா். அவருக்கு வாள், வேல், முத்துராமலிங்க தேவா் சிலை மற்றும் மாதா உருவப் படம் உள்ளிட்ட நிணைவு பரிசுகளை நிா்வாகிகல் வழங்கினா். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவின் பேச்சை கேட்க காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.