ஏப். 9 - ஆம் தேதி சமரச தீா்வு நாளாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையங்களை நாட வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்றம் முன் தொடங்கிய துண்டுப் பிரசுரம் விநியோக நிகழ்ச்சிக்கு, சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமை வகித்தாா். பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் மணிமேகலா, ஆனந்த், சமரச தீா்வு மையத்திற்காக பயிற்சி பெற்ற வழக்குரைஞா்கள் சந்திரசேகா், சிவக்குமாா், விஜயகுமாா், பழனிச்சாமி, கதிா்வேல், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா் கணேஷ், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

சமரச விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

