ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:30 am IST

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வேலாயுதபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த ராஜாமணி மகன் அருண் (32) என்பதும், சென்னை நங்கநல்லூரில் உள்ள சிப்ஸ் கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தவா், தாயை பாா்ப்பதற்காக வந்திருந்தாராம். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.