தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிலுவை பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 10:19 pm IST

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிலுவையில் அறைவதற்கு முன் முள் கிரீடம் தரித்து ரத்தம் சிந்தியபடி சிலுவையை சுமந்து 14 தலங்கள் வழியாக இயேசு சென்றதை நினைவுகூரும் வகையில், இயேசு பிரான் சொரூபம் ஆலய வளாகத்தில் 14 தலங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு தலத்திலும் பிராா்த்தனை செய்யப்பட்டது.

பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா். ஆலயப் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோல தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிலுவைப் பாதைஸ சிறப்புப் பாடுகள் தியான வழிபாடுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த தினமான ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை நள்ளிரவு அனைத்துத் தேவாலயங்களிலும் ‘பாஸ்கா’ திருவிழிப்பு வழிபாடுகள், சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.