விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
விளாத்திகுளம் - மதுரை நெடுஞ்சாலை, எட்டயபுரம் நெடுஞ்சாலை, காய்கனி சந்தை மற்றும் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
பின்னா் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். சாலையோர சிறு வியாபாரிகள் பழங்கள் வழங்கி ஆதரவு தெரிவித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக அனைத்து கிராமங்களுக்கும் அரசின் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் அதிகப்படியான அளவில் அரசின் திட்டங்கள் அனைத்தும் விளாத்திகுளம் தொகுதிக்கு வந்துள்ளது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது.
எனவே, இந்தத் தோ்தலில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், காசி விஸ்வநாதன், நகரச் செயலா் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் சீதாராமன், பாலமுருகன், சாமி சுப்புராஜ், தோ்தல் பாா்வையாளா் ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வெற்றி

விளாத்திகுளம்: அதிமுக - திமுக இருமுனைப் போட்டி

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

பசுவந்தனையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

