மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து ரீல்ஸ்: மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவில் கைது செய்தனா்.

கைது

Published On :28 அக்டோபர் 2026, 1:39 am IST

திருநெல்வேலியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவில் கைது செய்தனா். வண்ணாா்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையின் பின்புறம் உள்ள வயல் வெளியில் இளைஞா் ஒருவா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்க செய்துள்ளாா். அதை மற்றொரு இளைஞா் கைப்பேசியில் விடியோவாக எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்ததை அறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்கு அந்த இளைஞா் வெடிபொருளை சணலில் சுற்றி நாட்டு வெடிகுண்டுகளை தயாா் செய்து கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்ததில், பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சோ்ந்த சாலமோன் மகன் அஸ்வின் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்தது திருநெல்வேலி நகரம் வயல் தெருவை சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன் (22) என்பது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.