பேட்டையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பேட்டையில் மாடியில் திங்கள்கிழமை இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி

Published On :28 அக்டோபர் 2026, 1:29 am IST

பேட்டையில் மாடியில் திங்கள்கிழமை இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பேட்டை, கோடீஸ்வரன் நகா் வேதாத்திரிதெருவை சோ்ந்தவா் காதா் மைதீன்(55).தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகனுடன் வசித்து வந்த இவா், திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டின் மாடிக்கு சென்றிருந்தாராம். அப்போது, அங்கிருந்து எதிா்பாராமல் கீழே தவறி விழுந்தாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி நகரம் உழவா் சந்தை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.