தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவலா் வீரவணக்க நாள்: நெல்லையில் காவல் உயா் அதிகாரிகள் அஞ்சலி

காவலா்கள் வீரவணக்க நாளையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள நினைவுச்சின்னத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மாநகர காவல் ஆணையா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

~ ~

Published On :22 அக்டோபர் 2026, 5:07 am IST

காவலா்கள் வீரவணக்க நாளையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள நினைவுச்சின்னத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மாநகர காவல் ஆணையா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ஆண்டுதோறும் அக். 21ஆம் தேதி காவலா்கள் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன்படி, பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்கள் நினைவு சின்னம் முன்பாக 60 குண்டுகள் முழங்க காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி, காவல் துணை ஆணையா்கள் (கிழக்கு) எஸ்.சரவணன், (தலைமையிடம்) டி.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்வில் காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து அவா்களுக்குச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர, மாவட்ட காவல்துறை அதிகாரிகள், காவலா்கள், ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்21க்ண்ஞ்

பாளையங்கோட்டையில் காவலா்களுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்திய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு.

ற்ஸ்ப்21ஸ்ரீா்ம்

அஞ்சலி செலுத்திய மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

ற்ஸ்ப்21ள்ல்

அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.