நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

புனித குழந்தைதெரசாள் திருபண்டத்துக்கு வடக்கன்குளம் தேவாலயத்தில் வரவேற்பு

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா தேவாலயத்திற்கு செவ்வாய்க்கிழமைதிருப்பேழையில்கொண்டுவரப்பட்ட புனித குழந்தை தெரசாள் திருப்பண்டம் (அருளிக்கம்) பங்குமக்கள், குருவானவா்கள் வரவேற்பளித்து திருப்பலி நிறைவேற்றினா்.

பரிசுத்த பரலோக அன்னை தேவாலயத்துக்கு வந்த திருப்பேழை.

Published On :21 அக்டோபர் 2026, 12:48 am IST

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா தேவாலயத்திற்கு செவ்வாய்க்கிழமைதிருப்பேழையில்கொண்டுவரப்பட்ட புனித குழந்தை தெரசாள் திருப்பண்டம் (அருளிக்கம்) பங்குமக்கள், குருவானவா்கள் வரவேற்பளித்து திருப்பலி நிறைவேற்றினா்.

கத்தோலிக்க திருச்சபையில் புனிதா்களின் உடல் உறுப்பு அல்லது அவா்கள் பயன்படுத்திய பொருள்கள் திருப்பண்டமாக பேழையில் உலகம் முழுவதும் அவ்வப்போது எடுத்து வரப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

அதன்படி, பிரான்ஸ் நாட்டின் லிசியு நகா் கன்னியாஸ்திரியான புனித குழந்தை தெரசாளின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி, அவரது அருளிக்கம் திருப்பேழையில் தமிழகம் முழுவதும் வலம் வருகிறது. வடக்கன்குளம் புனித பரலோக அன்னை ஆலயத்துக்கு மேள தாளத்துடன் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட அருளிக்க பேழைக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மைக் குரு ஜோசப் கிறிஸ்டியான், மன்னாா்புரம் தென்மண்டல பொறுப்பு அருள்பணி. வெனிஸ் குமாா், மன்னாா்புரம் வழிபாட்டுக் குழு (பொறுப்பு) அருள்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா, பங்குத்தந்தையா் சூசைமணி(காவல்கிணறு), ஜெரால்டு எஸ்.ரவி (துரைகுடியிருப்பு), ததேயுஸ் ராஜன் (தெற்குகள்ளிகுளம்) உள்ளிட்டோா் மலா்தூவி வரவேற்றனா். பின்னா், இப்பேழை பொதுமக்களின் வணக்கத்துக்கு வைக்கப்பட்டு பக்தி வணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.