பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.28.64 லட்சம்

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

News image
Updated On :28 மே 2026, 2:53 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி, கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு. செல்லையா, உறுப்பினா் கீதா பழனி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ.28 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரொக்கம், 29 கிராம் 200 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்கள், 927 கிராம் 400 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 16 ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.