கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல்லையில் செவிலிய விடுதி மாணவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 3:11 am IST

திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் கண் மருத்துவ செவிலியக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் மோசஸ் சாம் நெல்சன் (20).

இவா் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியாா் கண் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு செவிலியா் பயிற்சி படிப்பு படித்து வந்தாா். இதற்காக அக்கல்லூரியின் மாணவா் விடுதியில் தங்கி இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, திங்கள்கிழமை காலை அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.