கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாணவா் கேசவன்.

Updated On :21 மே 2026, 2:30 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் கேசவன் (17). இவா், தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து அரசுப் பொதுத் தோ்வு எழுதினாா். பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், தோ்வு முடிவுகளை அறிந்த மாணவா் கேசவன், ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லையாம். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேசவன் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகோபால் , காவலா்கள் கேசவனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.