பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிபிஐ அதிகாரி போல் பேசி ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சம் மோசடி: பெங்களூரு நபா் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:20 am IST

திருநெல்வேலி, மே 25: சிபிஐ அதிகாரி போல் பேசி, ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சத்தை மோசடி செய்ததாக, பெங்களூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சேவியா் (80). ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநா். இவரை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பெங்களூரில் இருந்து சிபிஐ அதிகாரிகள் பேசுவதாகக் கூறி வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், அரசுக்கு எதிராக பேசியதாக தங்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலி முதல் தகவல் அறிக்கை அனுப்பி, இதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளனா்.

மேலும், குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும்; விசாரணை முடிந்ததும் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் எனக் கூறி, அவரிடமிருந்து இரண்டு தவணைகளாக ரூ.53 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், கா்நாடக மாநிலம், பெங்களூரை சோ்ந்த சந்தோஷ் பிரபு(44) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை சைபா் கிரைம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.