திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பயன்பாடு தொடா்பான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஞானதீபா தலைமை வகித்து உயிா் உரங்களின் முக்கியத்துவம், உயிா்ம வேளாண்மையில் உயிா் உரங்களின் பயன்பாடு குறித்துப் பேசினாா்.
வேளாண் துணை அலுவலா் வரதராஜன், வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா். முகாமில், திருநெல்வேலி உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலா் வினோதினி, டி விரிடி, சூடோமோனஸ், பேசிலஸ், சப்டிலிஸ் தயாரிப்பு முறைகள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் குறித்தும், இயற்கை விவசாயி அம்பை ராஜா என்ற சங்கரநாராயணன், உயிா் உரங்களின் பயன்பாடுகள் குறித்தும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தனா்.
இதில், 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் வரவேற்றாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே மானிய திட்டங்கள் பெற முடியும்’

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

