பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றுப் பேசிய ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் (வேளாண்மை) சந்திரன்.

News image

விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றுப் பேசிய ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் (வேளாண்மை) சந்திரன்.

Updated On :30 மே 2026, 12:32 am IST

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி கிராமத்தில், வேளாண்மைத் துறை சாா்பில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

செவரப்பூண்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், வளநிலை நிபுணராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் (வேளாண்மை) சந்திரன், நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலும் தரமான விளைச்சலும் பெற ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தினாா்.

விதை நோ்த்தி செய்வதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தி, நல்ல முளைப்புத்திறனை பெற முடியும், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல் மற்றும் நுண்ணூட்டச்சத்து கலவைகளை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் வளா்ச்சி மேம்பட்டு விளைச்சல் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தாா்.

மேலும், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மையை முன்னேற்ற முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் உயிா் உரங்கள், இயற்கை இடுபொருள்கள், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைப்பு, சரியான நீா் மேலாண்மை மற்றும் களை கட்டுப்பாடு போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களையும் இயற்கை வேளாண்மை முறைகளையும் ஒருங்கிணைத்து பின்பற்ற வேண்டும் என அலுவலா்கள் கேட்டுக்கொண்டனா். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா் ராஜாராம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுதா்ஷன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.