பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல்லையில் இளம்பெண் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

கொலை

Updated On :17 மே 2026, 2:09 am IST

திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சென்னல்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (35). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளாா். கணவா் பெங்களூரில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை பாளையங்கோட்டை, தியாகராஜநகா் பகுதியில் தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டு பைக்கில் வீட்டின் அருகே வந்த முத்துமாலையை, அவ்வழியாக பைக்கில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டனா்.

தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், முத்துமாலையின் உடலை உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.