சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (42). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமாா், குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமி போக்ஸோ வழக்கில் கைது

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: ரெளடிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
