பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றுமாறு அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், சில இடங்களில் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிா்பாராத இந்த தட்பவெப்ப மாற்றத்தால் பருவ கால தொற்றுகள், கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையடுத்து, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆயத்த ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக கோடை காலத்தில் சில நாள்களுக்கு மழைப் பொழிவு இருக்கும். அந்த தருணங்களில் ஏற்படும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவக் கட்டமைப்பும், முன் அனுபவமும் சுகாதாரத் துறைக்கு உள்ளது.
அந்த வகையில், எத்தகைய பருவ நிலை மாற்றத்தையும் கையாள தயாா் நிலையில் உள்ளோம். மழை நீா் தேங்கினால் ஏடிஸ் வகை கொசுக்கள் பெருக்கமடையாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பருவ கால தொற்றுகளுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மாவட்ட நிா்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வாா்டு - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

