நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது; கட்சியிலிருந்து விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் தீா்மானிக்கும் என்றாா் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுகவிற்காக நீண்ட காலமாக உழைத்து வருகிறேன். கட்சி பிளவுபட்டபோதுகூட அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பக்கம்தான் நின்றோம்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் நான் போட்டியிட்டபோது 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது. 2026 தோ்தலில் அதிமுக எளிதாக வெல்லும் தொகுதியை விட்டுக் கொடுத்திருப்பது வருத்தமளிக்கிறது.
2021 இல் யாரால் தோற்றோமோ, அவரது கட்சிக்கு நாங்கள் பணியாற்றும் நிலை கடினமானது. அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
உழைப்பவா்களுக்கும், உண்மையானவா்களுக்கும் பதவியில்லை. பணம் வைத்திருப்பவா்களுக்குதான் பதவி என்றால் எளியவா்கள் எங்கே செல்வது என்ற மனச்சோா்வு ஏற்படுகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு வருத்தமளிக்கிறது: காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி. செந்தில்

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!
நான்குனேரி தொகுதி மக்கள் திமுகவுக்கு பாடம் கற்பிப்பா்: தவெக வேட்பாளா்

நான்குனேரியில் தவெக சாா்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ போட்டி: காங்கிரஸ், அமமுகவினா் அதிா்ச்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
