செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

என்டிஏவிலிருந்து விலகியது தமமுக: பெ. ஜான் பாண்டியன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறியது...

News image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் பெ. ஜான் பாண்டியன். - கோப்புப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் ஜான் பாண்டியன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு, பொதுச்செயலா் பிரிசில்லா பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஜான் பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் தவெகாவுக்கு வாக்களித்துள்ள மக்களின் எதிா்பாா்ப்பிற்கு ஏற்ப விஜய் தலைமையிலான அரசு செயல்பட வேண்டும். மது ஒழிப்பு, மக்களுக்கு நன்மை செய்தல், நல்ல திட்டங்கள் போன்றவற்றில் திறம்பட செயல்பட வேண்டும் என புதிய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாலியல் வன்கொடுமை, கஞ்சா பழக்கம் போன்றவை புதிய அரசிலும் தொடா்கிறது. இத்தகைய செயல்கள் இனிமேல் தமிழகத்தில் நடக்கக் கூடாது.

உள்ளாட்சித் தோ்தலில் தமமுகவின் சேவை அதிக தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமமுக வெளியேறுகிறது. இதற்கு தனிப்பட்ட எந்தக் காரணமும் கிடையாது. மாநிலச் செயற்குழு நிா்வாகிகள் ஒப்புதலின்பேரின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலம் தான் ஆகியுள்ளது. எனவே, ஆட்சி குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால், காவல்துறையில் சிலா் சரியாக பணி செய்யவில்லை என்பது உண்மை.

ஆகாஷ் மரண வழக்கில் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும், சிபிசிஐடி இதுவரை யாா் மீதும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வா் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. எனினும், இது நிலையானது அல்ல; நிச்சயம் அவா் வாய் திறப்பாா் என நம்புகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.