தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து தில்லிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் வனத்துறையில் பணிபுரிந்தவா். இதனை நினைவுகூரும் வகையில் செங்கோட்டை- புனலூா், புனலூா்- செங்கோட்டை இடையே காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பேருந்து இயக்க வேண்டும். செங்கோட்டை- தில்லி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- வாஞ்சி மணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-செங்கோட்டை இடையே காலை முதல் இரவு வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
மேலும், வாஞ்சி இயக்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் நினைவு நாளையொட்டி செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல் முன்பு இம் மாதம் 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மௌன அஞ்சலியும், நடுகல்லுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

செங்கோட்டை பள்ளியில் குடிநீா் தொட்டி திறப்பு

சென்னை-திருச்செந்தூா் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க எம்எல்ஏ கோரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

