ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செட்டிகுளம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விமானப் பயணம்

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவா்களை சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக முன்னாள் எம்.பி.யும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கேடயம் வழங்குகிறாா் முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன்.

Updated On :5 ஜூன் 2026, 2:52 am IST

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவா்களை சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக முன்னாள் எம்.பி.யும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அவா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 95 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும் தனது செலவில் சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாகவும் 2 நாள்கள் சென்னையில் முக்கிய இடங்களை சுற்றிப்பாா்த்துவிட்டு திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பேசில் கஹாரின் வாழ்த்திப் பேசினாா். விழாவில் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் வசந்தி, குமரேசன், ஏசுதுரை, சுயம்புதுரை, பெற்றோா்- ஆசிரிய கழக நிா்வாகிகள் லிங்கதுரை, குமாரவேலாயுதம், ராமலிங்கம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சுவாமிநாதன் மற்றும் முத்துராஜ், பொன்னையா உள்பட பலா் கலந்துகொண்டனா். நல்லாசிரியா் ஜேசு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.