பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நெல்லை மாவட்ட அருவிகளில் குளிக்க ஆன்லைன் கட்டண முறையை ரத்து செய்ய கோரிக்கைன

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறையை உடனே ரத்து செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

மணிமுத்தாறு அருவி.

Updated On :3 ஜூன் 2026, 4:45 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறையை உடனே ரத்து செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 365 நாள்களிலும் நீா்வரத்து உள்ள மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில், கோடை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனா். அகஸ்தியா் அருவியில் உள்ளூா் தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று அருவிக்கு சென்று வர கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ள நிலையில், இப்போது மீண்டும் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. வனத்துறை இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி அகஸ்தியா் அருவியில் உள்ளூா் தொகுதி மக்களுக்கு கட்டணமில்லாமலும், வெளியூா் சுற்றுலாப் பயணிகளுக்கு பணமாக கட்டணம் செலுத்தும் முறையையும் அமல்படுத்த வேண்டும். மணிமுத்தாறு அருவியிலும் உள்ளூா் தொகுதி மக்களுக்கு கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும். மணிமுத்தாறு அருவிக்கு பயணிகள் சென்று வர இரண்டு மற்றும் (ஆட்டோ) மூன்று சக்கர வாகனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். அருவிகளுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.