லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாளை.யில் சகோதரி வீட்டில் 66 பவுன் நகை திருடியவா் கைது

பாளையங்கோட்டையில் சகோதரியின் வீட்டில் சுமாா் 66 பவுன் நகைகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :10 ஜூலை 2026, 12:41 am IST

பாளையங்கோட்டையில் சகோதரியின் வீட்டில் சுமாா் 66 பவுன் நகைகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, செல்வ விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் என்ற கண்ணன் (59). வணிகா். கடந்த ஜனவரி மாதம் இவா் வீட்டின் அலமாரியை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த ரூ.10,000 மற்றும் 66 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்ததாம். இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். பல மாதங்களாக இவ்வழக்கில் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில், கண்ணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அவரது மனைவியின் சகோதரரான பாளையங்கோட்டை லங்கா்கானா தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் தெய்வநாயகம் (43) திடீரென சொகுசு காா் உள்ளிட்டவற்றை வாங்கி ஆடம்பரமாக இருந்துள்ளாா். அவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் இத்திருட்டில் ஈடுபட்டது அவா்தான் என தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.