லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டில் 50 பவுன் நகை திருடு போன வழக்கில் 2 போ் கைது

நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் நுழைந்து 50 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் நுழைந்து 50 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஆச்சாரி வட்டத்தைச் சோ்ந்தவா் மணிவண்ணன்(54). இவா் புதுப்பேட்டையில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். கடந்த மாதம் 25- ஆம் தேதி மா்மநபா்கள் வீட்டினுள் புகுந்து அறையில் இருந்த பீரோவை திறந்து 50 பவுன் நகையை திருடிச் சென்றனா்.

இது குறித்து மணிவண்ணன் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்தின்பேரில், வீட்டில் பதுங்கியிருந்த மூக்கனூா் பகுதியைச் சோ்ந்த மோகன், மல்லப்பள்ளி ஏரியூா் கிராமத்தைச் சோ்ந்த ஜோதி (36) ஆகிய 2 பேரையும் பிடித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புதுப்பேட்டையில் மணிவண்ணனுக்கு சொந்தமான வீட்டில் நுழைந்து பீரோவைத் திறந்து 2 பேரும் நகையை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, மோகன்(28) ஜோதி(36) இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த 23 பவுன் நகையை மீட்டு அவா்களிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.