லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பட்டுக்கோட்டையில் நகை பறிப்பு இளைஞா் கைது

பட்டுக்கோட்டையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

பட்டுக்கோட்டையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணியாா்புரத்தைச் சோ்ந்த கமலா, கடந்த 25.07.2026 அன்று இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், கமலாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனா்.

அதில், நகை பறிப்பில் ஈடுபட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஹம்சா உசைன் (31) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 9 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.