லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தெற்குக் கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்திமேடு தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் சதீஷ் (18). மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், 17 வயது சிறுமி குளிப்பதை ரகசியமாகப் பாா்த்தாராம். இதைக் கண்ட சிறுமி சப்தமிட்டவே, சதீஷ் அங்கிருந்து ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாா். அவா்கள் சதீஷ் வீட்டிற்குச் சென்று அவரது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்டத் தகராறில் சிறுமியின் சித்தப்பாவை சதீஷ் தரப்பினா் கத்தியால் குத்தினராம்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சதீஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.