லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குண்டா் தடுப்புச் சட்டத்தில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடைய முதியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடைய முதியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவி வட்டம் அரசன்குளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் இசக்கியப்பன் (60). இவா், போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா். இதனிடையே, இசக்கியப்பனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா சாஸ்திரி பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ஆனந்த மோகன், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இசக்கியப்பனை கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, செவ்வாய்க்கிழமை இசக்கியப்பனை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.