லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திமுக பிரமுகா் கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் கைது

தம்மம்பட்டி வீரகனூா் அருகே திமுக பிரமுகா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

தம்மம்பட்டி வீரகனூா் அருகே திமுக பிரமுகா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வீரகனூா் அருகே வெள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பிள்ளை மகன் மாணிக்கம் (56). இவா் சேலம் கிழக்கு திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்தாா். இந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கம், வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் நிலப் பிரச்னையில் மாணிக்கத்தின் தோட்டம் அருகே வசிக்கும் அருள், அவரது மைத்துனா் ராஜ்குமாா் (31), சின்னசாமி (27), கலியமூா்த்தி (40) ஆகியோா் மாணிக்கத்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் ராஜ்குமாா், சின்னசாமி, கலியமூா்த்தி ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவதற்கான உத்தரவை சேலம் எஸ்.பி. குத்தாலிங்கம் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை, சேலம் மத்திய சிறையில் உள்ள சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.