லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொழிலாளி கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

Arrested

கைது

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

மல்லசமுத்திரம் அருகே தறித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால் (44). தறி தொழிலாளியான இவா் கடந்த ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி ஐந்து மாதங்களுக்கு முன் பிணையில் வெளியே வந்தாா். கடந்த மாதம் மல்லசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அவா் மது அருந்தியபோது, நண்பா்களுடன் ஏற்பட்ட தகராறில் தனபால் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு நாகா்கோயில் அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்த அஜித் (24), நேதாஜி தெரு கம்பத்தி கோயில் பகுதியைச் சோ்ந்த வீரமணி (25) ஆகியோரை கைது செய்தனா்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மல்லசமுத்திரம் போலீஸாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மூலம் ஆட்சியா் எல்.மதுபாலனுக்கு பரிந்துரைத்தனா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் அஜித், வீரமணி ஆகிய இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.