நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, காலை, மாலை நேரங்களில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம் நடைபெற்றது.
5-ஆம் நாளில் (ஏப். 24) கருட சேவை, 7-ஆம் நாளில் (ஏப். 26) தங்க சப்பரம், கண்ணாடி சப்பரம், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெருமாள் வெள்ளிச் சந்திர வாகனத்தில் எழுந்தருளல் ஆகியன நடைபெற்றன. 10-ஆம் நாளான புதன்கிழமை (ஏப். 29)தேரோட்டத்தையொட்டி, காலையில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வானமாமலை மடத்தின் 31-ஆவது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமி கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். தோ் ரத வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

