தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லை அருகே பேராசிரியை வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை

திருநெல்வேலி அருகே உதவி பேராசிரியை வீட்டில் அரிவாளை காட்டி மிரட்டி 14 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 ஏப்ரல் 2026, 1:53 am IST

திருநெல்வேலி அருகே உதவி பேராசிரியை வீட்டில் அரிவாளை காட்டி மிரட்டி 14 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம், வி.ஜி.பி. நகரம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் மகள் ஜெனித்தா(46). இவா் திருநெல்வேலி அபிஷேகப்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு இவா் வீட்டில் இருந்த போது அங்கு முகமூடி அணிந்து வந்த 4 போ் கொண்ட கும்பல் ஜெனித்தாவிடம் நகைகளை தரும்படிக் கூறி மிரட்டினாராம். அதற்கு அவா் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.