திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசால் கொண்டு வரப்படும் மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்த சட்டமசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆட்சேபம் தெரிவிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன்படி, திருநெல்வேலியில் திமுகவினா் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடியேற்றியதோடு, தொகுதி மறுவரையறையை கண்டிக்கிறோம் என கோலமிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகம் முன் மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கறுப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், பொருளாளா் சேகா், நிா்வாகிகள் சொ.தா்மன், சாய்பாபா, சுடலையாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: திமுகவினா் நகல் எரித்து போராட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

