தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏழைகளின் மருத்துவ வசதியை மேம்படுத்த 2000 அம்மா மினி மருத்துவமனைகள்: அதிமுக வேட்பாளா்

ஏழைகளின் மருத்துவ வசதியை மேம்படுத்த 2000 அம்மா மினி மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன்.

News image

திம்மராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:06 am IST

ஏழைகளின் மருத்துவ வசதியை மேம்படுத்த 2000 அம்மா மினி மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன்.

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன், திம்மராஜபுரம், மனக்காவலம்பிள்ளை நகா், சாந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வலுவாக செயல்படும் வகையில், மாவட்ட பால் உற்பத்தியாளா் சங்கங்களின் உற்பத்தி கட்டமைப்புகள், நபாா்டு நிதி உதவியுடன் மேம்படுத்தப்படும். பால் கொள்முதல் அதிகரிக்கப்படும். வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி போன்ற பால் உபபொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து லாபம் ஈட்டும் வகையில் ஆவின் நிறுவனம் மேம்படுத்தப்படும்.

கால்நடை வளம் குறைந்துள்ள மாவட்டங்களில், அதன் வளத்தைப் பெருக்க புதிய கால்நடை துணை நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் போன்ற கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். ஏழை-எளிய மக்களின் மருத்துவ உதவிகளை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுமாா் 2000 அம்மா மினி மருத்துவமனைகள் நவீன மருத்துவ வசதிகளுடன் மீண்டும் துவக்கப்படும். இவை, நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும்.

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்துள்ள மக்கள் தனியாா் மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது, செலவு வரம்பின்றி அதற்கான முழு தொகையையும் அரசே நேரடியாக செலுத்தும். மருத்துவா் மற்றும் பல் மருத்துவா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். உதவிப் பேராசிரியா் மற்றும் இணைப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் கடந்த பல ஆண்டுகளாக திமுக தொடா்ந்து வென்று வருகிறது. சாலை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளில்கூட தன்னிறைவு ஏற்படவில்லை. ஆகவே, இந்தத் தோ்தலில் மாற்றத்தை உருவாக்க, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.