தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:54 am IST

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு, மானூா் மற்றும் ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திருநெல்வேலி தொகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனக்கு வாய்ப்பளித்தால் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பதோடு, திருநெல்வேலி நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அதைத் தடுத்து குப்பைகளை நவீன முறையில் கையாள செயல்திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.