தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம், மது பாட்டில்கள், பரிசுப்பொருள்கள் என இதுவரை ரூ. 80 லட்சத்து 87ஆயிரத்து 317 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 1:55 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம், மது பாட்டில்கள், பரிசுப்பொருள்கள் என இதுவரை ரூ. 80 லட்சத்து 87ஆயிரத்து 317 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வண்ணாா்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி தவெகவினா் கொண்டு வந்த துண்டுப் பிரசுரங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வரை அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் ரூ.13,72,710 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.40,50,870 ரொக்கம், ரூ. 9,29,009 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.31,07,438 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.80,87,317பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சி-விஜில் செயலி மூலம் 90 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 84 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 6 புகாா்கள் கைவிடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.