ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:13 am IST

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுதாக்கல் கடந்த மாா்ச் 30 முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 188 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதில், பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சாா்பில் மு. அப்துல் வஹாப், அதிமுக சாா்பில் சையது சுல்தான் சம்சுதீன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மரியஜான் உள்பட 28 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

வேட்பாளா்களின் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். திமுக மற்றும் தவெக வேட்பாளா்களின் மனுக்களை ஏற்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு தகுந்த முகாந்திரங்கள் இல்லாததால் மனுக்கள் ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாளையங்கோட்டை தொகுதியில் 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 (திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சிகள்) அங்கீகரிக்கப்படாத கட்சிகள்- 4 (தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் இந்தியா் கட்சி, புதிய மக்கள் தேசம் கட்சி), சுயேச்சைகள் 11 என மொத்தம் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகத்தின் மாற்று வேட்பாளா்கள் 3 போ், சுயேச்சை வேட்பாளா்கள் 5 போ் என 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.