மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:15 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, மேலச்செவல், வீரவநல்லூா், புதுக்குடி உள்பட பல்வேறு இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) வெங்கடசுப்பிரமணியன் பாப்பாக்குடியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கொள்முதல் நிலையத்தில் பட்டியல் அலுவலா் முத்துக்குமாா், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் விவரங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்தாா். நெல் கொள்முதல் செய்வதில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். ஆய்வின்போது, துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ் குமாா் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.