திருநெல்வேலி அருகே வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ. உள்பட 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
தாழையூத்தை அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன்(52). இவா் பாலாமடை பகுதியில் கிரஷா் ஆலை மற்றும் குவாரி வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமநாதன், காவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவரது ஆலைக்குச் சென்று, வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் வேண்டும் எனக் கேட்டு மிரட்டினராம்.
இதுகுறித்து அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், விசாரணை நடைபெற்ற நிலையில், உதவி ஆய்வாளரும், காவலரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம்: துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

