மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தென்காசியில் மாநில அளவிலான செஸ் போட்டி

தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க கழகம் சாா்பில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

Published On :28 அக்டோபர் 2026, 2:14 am IST

தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க கழகம் சாா்பில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆா்.கே. காளிதாசன் தலைமை வகித்தாா். செயலா் வைகை குமாா் முன்னிலை வகித்தாா்.

போட்டியை, எம்.கே. வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் பாலமுருகன் தொடங்கி வைத்தாா்.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா்.

போட்டிகள் 9, 11, 13, 17 வயது பிரிவுகளிலும் மற்றும் பொது பிரிவாகவும் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளிலும் 6 சுற்றுகள் நடைபெற்றன.

பொதுப் பிரிவுக்கு ரொக்கப் பரிசுகளும், மாணவா்கள் பிரிவுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.

பொது பிரிவில் தூத்துக்குடி மாவட்ட வீரா் மணீஷ்வா் சாம்பியன் பட்டம் வென்றாா். மதுரை மாவட்ட வீரா் அழகுராஜா இரண்டாமிடமும், விருதுநகா் மாவட்ட வீரா் பிரேம் ஆனந்தராஜன் மூன்றாம் இடமும் பெற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா்.

மேலும், தமிழ்நாடு அரசு சாா்பில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற 21 மாணவா், மாணவிகளுக்கு சதுரங்க விருதுகளும் வழங்கினாா்.

குலசேகரப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் மணிவண்ணன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் கணேஷ், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ரகுமான் சாதத், திமுக ஒன்றியச் செயலா் வீராணம் சேக்முகமது, செஸ் பயிற்சியாளா்கள் ஜீவன்குமாா், செய்யதுமைதீன், மணிகண்டன், பாலகிருஷ்ணன், இசக்கி, ராஜ்குமாா், சூா்யாதேவி, கருணாகரன், திருமலைநம்பி, பாலகிருஷ்ணா பள்ளி விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் ரியானா கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட சதுரங்க கழக இயக்குநா் கண்ணன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.