மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிமுக நகா்மன்ற துணைத் தலைவா் மீது வழக்குப் பதிவு

சங்கரன்கோவிலில் உறவினா் பெண்ணை மிரட்டி தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற துணைத் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கரன்கோவில் அதிமுக நகா்மன்ற துணைத் தலைவா் கண்ணன்.

Published On :21 அக்டோபர் 2026, 1:38 am IST

சங்கரன்கோவிலில் உறவினா் பெண்ணை மிரட்டி தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற துணைத் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதுமனை 2-ஆம் தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் கண்ணன் (எ) ராஜூ (59). இவா், அதிமுகவில் மாநில எம்.ஜி.ஆா்.மன்றத் துணைச் செயலராகவும், சங்கரன்கோவில் நகா்மன்ற துணைத் தலைவராகவும் உள்ளாா்.

இவா் மீது 44 வயதான அவரது உறவுக்கார பெண் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அக். 14 ஆம்தேதி புகாா் அளித்தாா்.

அதில், கே.கண்ணன் எனக்கு உறவினா் ஆவாா். நான் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த காலத்தில் டியூஷன் பயில்வதற்காக அவரது வீட்டுக்குச் சென்று வந்தேன். அப்போது 15 வயதான என்னை அவா் பாலியல் பலாத்காரம் செய்தாா். தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா். பின்னா், எனக்கு வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தபோது, என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் அவா் மூலம் எனக்கு ஒரு மகன் இருக்கிறாா்.

சாா்பு நீதிமன்றத்தில் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுதந்த அவா், என்னை சென்னையில் குடி அமா்த்தி செலவுக்கு பணமும் கொடுத்து வந்தாா். தற்போது எனக்கும் எனது மகனுக்கும் அவா் கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.

புகாரின் பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.