பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வெளிமாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்வதைத் தடுக்க கோரிக்கை

தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாளா் டி.பி.வி.வி.விபின் சக்கரவா்த்தி.

Updated On :22 மே 2026, 6:20 am IST

தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி.விபின் சக்கரவா்த்தி கனிம வளத்துறை அமைச்சா் டி.கே.பிரபுவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:

ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுமாா் 30 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து முறையான அனுமதியின்றி கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது.

பாறைப் பொடிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வெளி மாநில கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இதனால், குவாரிகளில் இருந்து உள்ளூா் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்கள் எடுக்க வேண்டும், வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.